فَنَادَتْهُ ٱلْمَلَٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٌ يُصَلِّى فِى ٱلْمِحْرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ ٱللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ ٱلصَّٰلِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர் மாடத்தில் நின்று தொழுது கொண்டிருக்க அவரை வானவர்கள் அழைத்தார்கள்: "அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை உண்மைப்படுத்தக்கூடியவராக, தலைவராக, இன்பத்தைத் துறந்தவராக, நபியாக, நல்லோரைச் சேர்ந்தவராக யஹ்யா (என்ற ஒரு மக)வைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான்."
Tamil Translation - Omar Sharifஆக, அவர் மாடத்தில் நின்று தொழுது கொண்டிருக்க அவரை வானவர்கள் அழைத்தார்கள்: “அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை உண்மைப்படுத்தக் கூடியவராக, தலைவராக, சரீர இன்பத்தைத் துறந்தவராக, நபியாக, நல்லோரில் ஒருவராக இருக்கின்ற யஹ்யா (என்ற ஒரு மக)வைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான்’’ (என்று வானவர்கள் கூறினார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi39. ஆகவே, அவர் மாடத்தி(‘மிஹ்ராப்')ல் நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) வானவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் ‘யஹ்யா' (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்திவைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.