قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَٰمٌ وَقَدْ بَلَغَنِىَ ٱلْكِبَرُ وَٱمْرَأَتِى عَاقِرٌ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفْعَلُ مَا يَشَآءُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் இறைவா! எனக்கு எவ்வாறு குழந்தை உண்டாகும். என்னையோ முதுமை அடைந்து விட்டது. என் மனைவியோ மலடி" என்று (ஸகரிய்யா) கூற, "(காரியம்) இவ்வாறுதான். அல்லாஹ், தான் நாடியதை செய்வான்" என்று (அல்லாஹ் பதில்) கூறினான்.
Tamil Translation - Omar Sharif“என் இறைவா! நானோ முதுமை அடைந்திருக்க, என் மனைவியோ மலடியாக இருக்க, எனக்கு எவ்வாறு குழந்தை கிடைக்கும்” என்று (ஸகரிய்யா) கூறினார். “(அல்லாஹ்வின் கட்டளை) இவ்வாறுதான். அல்லாஹ், தான் நாடியதை செய்வான்” என்று அல்லாஹ் (பதில்) கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. (அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கு எப்படி சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்துவிட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கிறாள்'' என்று கூறினார். (அதற்கு இறைவன்) ‘‘இப்படியே (நடைபெறும்). அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்'' என்று கூறினான்.