caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 30

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:30

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوٓءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُۥٓ أَمَدًۢا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفْسَهُۥ وَٱللَّهُ رَءُوفٌۢ بِٱلْعِبَادِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு ஆத்மாவும் நன்மையில் தான் செய்ததையும், தீமையில் தான் செய்ததையும் சமர்ப்பிக்கப்பட்டதாக பெற்றுக் கொள்ளும் நாளில், தனக்கு மத்தியிலும், அதற்கு (தீமைக்கு) மத்தியிலும் நீண்டதூரம் இருக்க வேண்டுமே! என (தீமை செய்த ஆத்மா) விரும்பும். அல்லாஹ் தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ் அடியார்களிடம் மிக இறக்க முடையவன்.
Tamil Translation - Omar Sharifஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்ததையும், தீமையில் தான் செய்ததையும் (தனக்கு முன்) சமர்ப்பிக்கப்பட்டதாக காணும் நாளில், தனக்கு மத்தியிலும், அதற்கு (-தீமைக்கு) மத்தியிலும் நீண்டதூரம் இருக்க வேண்டுமே! என (தீமை செய்த ஆத்மா) விரும்பும். அல்லாஹ், தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ் அடியார்கள் மீது மிக இரக்கமுள்ளவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (ஏனென்றால்,) அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிக்க இரக்கமுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70