قُلْ إِن تُخْفُوا۟ مَا فِى صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ ٱللَّهُ وَيَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: உங்கள் நெஞ்சங்களிலுள்ளதை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை அறிவான். இன்னும் வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் (அவன்) அறிவான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: உங்கள் நெஞ்சங்களிலுள்ளதை நீங்கள் மறைத்தாலும்; அல்லது, அதை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை நன்கறிவான். இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் (அவன்) நன்கறிவான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. (நபியே!) கூறுவீராக: உங்கள் மனங்களில் நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.