caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 28

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:28

لَّا يَتَّخِذِ ٱلْمُؤْمِنُونَ ٱلْكَٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ ٱللَّهِ فِى شَىْءٍ إِلَّآ أَن تَتَّقُوا۟ مِنْهُمْ تُقَىٰةً وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفْسَهُۥ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்கள் நம்பிக்கையாளர்களைத் தவிர நிராகரிப்பாளர்களை பாதுகாவலர்களாக (உதவியாளர்களாக) எடுத்துக்கொள்ள வேண்டாம். எவர் இதைச் செய்வாரோ அவர் அல்லாஹ்விடம் எதிலுமில்லை. (அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு நீங்கியவர் ஆவார்.) நீங்கள் (அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து) அவர்களை கடுமையாக அஞ்சினால் தவிர (அப்படி செய்யாதீர்கள்). அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்கள், நம்பிக்கையாளர்களைத் தவிர நிராகரிப்பாளர்களை (தங்களது) பாதுகாவலர்களாக (உதவியாளர்களாக) எடுத்துக்கொள்ள வேண்டாம். எவர் இதைச் செய்வாரோ அவர் அல்லாஹ்வை விட்டும் நீங்கிவிட்டார். (அல்லாஹ்வும் அவரை விட்டு நீங்கிவிட்டான். இன்னும் அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு நீங்கியவர் ஆவார்.) நீங்கள் (அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து, அவர்கள் பெரும்பான்மையாக இருந்து) அவர்களை அதிகம் அஞ்சினால் தவிர. (அப்போது மார்க்க விஷயத்தில் அவர்களுக்கு கீழ்ப்படியாமல், உலக விஷயத்தில் அவர்களுடன் மென்மையாக நடப்பது உங்கள் மீது குற்றமில்லை). இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi28. நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தவிர எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (நீங்கள்) அல்லாஹ்விடம்தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70