caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 199

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:199

وَإِنَّ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ لَمَن يُؤْمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْكُمْ وَمَآ أُنزِلَ إِلَيْهِمْ خَٰشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنًا قَلِيلًا أُو۟لَٰٓئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதக்காரர்களில் அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக அல்லாஹ்வையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும், அவர்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்கள் உண்டு. அல்லாஹ்வுடைய வசனங்களுக்குப் பகரமாக ஒரு சொற்பகிரயத்தை வாங்க மாட்டார்கள். (வேத வசனங்களை மாற்ற மாட்டார்கள்.) அவர்கள், அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிக விரைவானவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வேதக்காரர்களில் அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக அல்லாஹ்வையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும், அவர்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், அல்லாஹ்வுடைய வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்க மாட்டார்கள். (வேத வசனங்களை மாற்றி காசுக்காக தவறான சட்டங்களை கூற மாட்டார்கள்.) அவர்கள், அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் (அடியார்களின் செயல்களை) கணக்கெடு(த்து தகுந்த கூலி கொடு)ப்பதில் மிக விரைவானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi199. (நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இப்படியும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வற்றையும் நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இவர்களுக்கு இவர்களுடைய கூலி இவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத்தீவிரமானவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70