لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ لَهُمْ جَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا نُزُلًا مِّنْ عِندِ ٱللَّهِ وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌ لِّلْأَبْرَارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனினும், தங்கள் இறைவனை அஞ்சியவர்கள், அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து விருந்தோம்பலாக நதிகள் ஓடும் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அல்லாஹ்விடம் உள்ளது நல்லோருக்கு மிகச் சிறந்ததாகும்.
Tamil Translation - Omar Sharifஎனினும், எவர்கள் தங்கள் இறைவனை அஞ்சி (பாவங்களை விட்டு விலகி)யவர்கள், அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து விருந்தோம்பலாக அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அல்லாஹ்விடம் உள்ள (வெகுமதியான)து நல்லடியார்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi198. ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கிறார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்.