caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 176

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:176

وَلَا يَحْزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِى ٱلْكُفْرِ إِنَّهُمْ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًٔا يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِى ٱلْـَٔاخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நிராகரிப்பில் விரைபவர்கள் உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். மறுமையில் நற்பாக்கியத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) நிராகரிப்பில் விரைபவர்கள் உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். மறுமையில் அறவே நற்பாக்கியத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே அல்லாஹ் நாடுகிறான். இன்னும், அவர்களுக்கு மகத்தான தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi176. (நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச்செய்ய அல்லாஹ் விரும்புகிறான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அவர்களுக்கு பெரிய வேதனையும் உண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70