إِنَّمَا ذَٰلِكُمُ ٱلشَّيْطَٰنُ يُخَوِّفُ أَوْلِيَآءَهُۥ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِن كُنتُم مُّؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனெல்லாம் ஷைத்தான்தான். (அவன்) தன் நண்பர்களை பயமுறுத்துகிறான். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களைப் பயப்படாதீர்கள்; என்னைப் பயப்படுங்கள்.
Tamil Translation - Omar Sharif(உங்களை அச்சுறுத்திய) அவனெல்லாம் ஷைத்தான்தான். (அவன்) தன்(னை நம்புகின்ற) நண்பர்களை பயமுறுத்துகிறான். ஆகவே, நீங்கள் (உண்மையான, உறுதியான) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களைப் பயப்படாதீர்கள்; (உங்கள் இறைவனாகிய) என்னைப் பயப்படுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi175. இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான் தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்.