caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 146

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:146

وَكَأَيِّن مِّن نَّبِىٍّ قَٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا۟ لِمَآ أَصَابَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُوا۟ وَمَا ٱسْتَكَانُوا۟ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّٰبِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான நல்லடியார்கள் போர் புரிந்தனர். அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (கஷ்டத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவிழக்கவில்லை, பலவீனமடையவில்லை, பணியவில்லை. பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஎத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான இறை நேச நல்லடியார்கள் போர் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவு இழக்கவில்லை; இன்னும், பலவீனமடையவில்லை; இன்னும், பணியவில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi146. எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்துவிடவுமில்லை. (இவ்வாறு சிரமங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70