caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 147

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:147

وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّآ أَن قَالُوا۟ رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியத்தில் எங்கள் வரம்புமீறலையும் எங்களுக்கு மன்னி! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு!" என்று கூறியதைத் தவிர அவர்களுடைய கூற்றாக (வேறொன்றும்) இருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இன்னும், நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!’’ என்று கூறியதைத் தவிர அவர்களுடைய கூற்றாக (வேறொன்றும்) இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi147. (இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றிபெற நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!'' என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70