caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 135

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:135

وَٱلَّذِينَ إِذَا فَعَلُوا۟ فَٰحِشَةً أَوْ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ذَكَرُوا۟ ٱللَّهَ فَٱسْتَغْفَرُوا۟ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟ وَهُمْ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்) ஒரு மானக்கேடானதைச் செய்தால் அல்லது தங்களுக்கு அநீதியிழைத்தால் அல்லாஹ்வை நினைத்து, தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்துகொண்டு, தாங்கள் செய்த (பாவத்)தின் மீது நிலைத்திருக்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால்; அல்லது, தங்களுக்குத் தாமே அநீதியிழைத்துவிட்டால் (உடனே) அல்லாஹ்வை நினைவில் கொண்டுவருவார்கள்; தங்கள் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்தவர்களாக இருந்த நிலையில் தாங்கள் செய்த (பாவத்)தின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi135. இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70