caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 134

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:134

ٱلَّذِينَ يُنفِقُونَ فِى ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلْكَٰظِمِينَ ٱلْغَيْظَ وَٱلْعَافِينَ عَنِ ٱلنَّاسِ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்) செல்வத்திலும், வறுமையிலும் தர்மம் புரிபவர்கள்; கோபத்தை மென்றுவிடுபவர்கள்; மக்களை மன்னித்து விடுபவர்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள், செல்வத்திலும் வறுமையிலும் தர்மம் செய்வார்கள்; இன்னும், கோபத்தை மென்றுவிடுவார்கள்; இன்னும், மக்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi134. அவர்கள் (எவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்துவிடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70