أُو۟لَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களின் கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும் சொர்க்கங்களும் ஆகும். (அவர்கள்) அதில் நிரந்தரமானவர்கள். நன்மைபுரிவோரின் கூலி சிறந்ததாகிவிட்டது!
Tamil Translation - Omar Sharifஅத்தகையவர்கள் - அவர்களின் கூலி அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கங்களும் ஆகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நல்ல அமல் செய்பவர்களின் கூலி மிக சிறந்ததாக இருக்கும்!
Tamil Translation - Abdulhamid Baqawi136. இவர்களுக்குப் பிரதிபலன், அவர்களின் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே!