caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 117

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:117

مَثَلُ مَا يُنفِقُونَ فِى هَٰذِهِ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَثَلِ رِيحٍ فِيهَا صِرٌّ أَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَأَهْلَكَتْهُ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வுலக வாழ்வில் (இஸ்லாமிற்கு எதிராக அவர்கள்) தர்மம் செய்வதின் உதாரணம், அதில் கடுமையான குளிருள்ள ஒரு காற்றின் உதாரணத்தைப் போலாகும். தங்களுக்குத்தாமே அநீதியிழைத்த ஒரு கூட்டத்தாரின் விளை நிலத்தை (அக்காற்று) அடைந்து, அதை அழித்தது. அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைக்கவில்லை. எனினும், தங்களுக்குத்தாமே அநீதியிழைக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஇவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக அவர்கள்) தர்மம் செய்வதின் உதாரணம், அதில் கடுமையான குளிருள்ள ஒரு காற்றின் உதாரணத்தைப் போலாகும். தங்களுக்குத் தாமே அநீதியிழைத்த கூட்டத்தாரின் விளை நிலத்தை (அக்காற்று) அடைந்து, அதை அழித்தது. அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதியிழைக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi117. இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கிறது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதை அழித்து விட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70