caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 33

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:33

وَلَمَّآ أَن جَآءَتْ رُسُلُنَا لُوطًا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالُوا۟ لَا تَخَفْ وَلَا تَحْزَنْ إِنَّا مُنَجُّوكَ وَأَهْلَكَ إِلَّا ٱمْرَأَتَكَ كَانَتْ مِنَ ٱلْغَٰبِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநமது (வானவத்) தூதர்கள் (நபி) லூத்திடம் வந்த போது அவர்களால் அவர் மனம் புண்பட்டார். இன்னும் அவர்களால் அவர் மன நெருக்கடிக்கு உள்ளானார். (சிரமத்திற்கு உள்ளானார்.) அவர்கள் (வானவர்கள்) கூறினார்கள்: பயப்படாதீர்! இன்னும் கவலைப்படாதீர்! நிச்சயமாக நாம் உம்மையும் உமது குடும்பத்தையும் பாதுகாப்போம் உமது மனைவியைத் தவிர. அவள் மீதம் இருப்பவர்களில் ஆகிவிடுவாள். (பின்னர் தண்டனையில் சிக்கி அழிந்து விடுவாள்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், நமது (வானவத்) தூதர்கள் (நபி) லூத்திடம் வந்தபோது அவர் (தம்மிடம் வந்த வானவர்)களினால் கவலைப்பட்டார். இன்னும், அ(ந்த வான)வர்களால் அவர் மன நெருக்கடிக்கு உள்ளானார். (வானவர்கள்) கூறினார்கள்: “பயப்படாதீர்! இன்னும், கவலைப்படாதீர்! நிச்சயமாக நாம் உம்மையும் உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தையும் பாதுகாப்போம். (அழிவில்) தங்கிவிடுபவர்களில் அவள் ஆகிவிடுவாள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi33. பின்னர் நம் (வானவ) தூதர்கள் லூத் (நபி) இடம் வந்தபொழுது, (அவ்வூரார் தீய எண்ணத்துடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது) அவர், (அந்த வானவர்களை பாதுகாத்துகொள்ள) தன் கையால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களுக்காகத் துக்கித்தார். அதற்கவர்கள், (அவரை நோக்கி) ‘‘ நீர் அஞ்ச வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். (நாம் இவ்வூராரை அழித்துவிட உமது இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம்.) நிச்சயமாக நாம் உம்மையும், உமது மனைவியைத் தவிர, (மற்ற) உமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம். அவள் (உம்முடன் வராது, இவ்வூராருடன்) தங்கி (அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70