قَالَ إِنَّ فِيهَا لُوطًا قَالُوا۟ نَحْنُ أَعْلَمُ بِمَن فِيهَا لَنُنَجِّيَنَّهُۥ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ كَانَتْ مِنَ ٱلْغَٰبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: “நிச்சயமாக அதில் (-அவ்வூரில் நபி) லூத் இருக்கிறார்.” அவர்கள் கூறினார்கள்: அதில் உள்ளவர்களை நாங்கள் நன்கறிந்தவர்கள். நிச்சயமாக அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாப்போம். அவருடைய மனைவியைத் தவிர. அவள் மீதம் இருப்பவர்களில் ஆகிவிடுவாள். (பின்னர் தண்டனையில் சிக்கி அழிந்து விடுவாள்.)
Tamil Translation - Omar Sharif(இப்ராஹீம்) கூறினார்: “நிச்சயமாக அதில் (-அவ்வூரில் நபி) லூத் இருக்கிறார்.” அவர்கள் கூறினார்கள்: அதில் உள்ளவர்களை நாங்கள் நன்கறிந்தவர்கள். நிச்சயமாக அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாப்போம், அவருடைய மனைவியைத் தவிர. அவள் (அழிவில்) தங்கிவிடக் கூடியவர்களில் ஆகிவிடுவாள்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. அதற்கவர் (அவ்வானவர்களை நோக்கி) ‘‘ நிச்சயமாக அதில் லூத்தும் இருக்கிறாரே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். அவருடைய மனைவி (அவருடன் செல்லாது அழிந்து போகக்கூடிய அவ்வூராருடன்) தங்கி (அவர்களுடன் அவளும் அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.