caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:17

إِنَّمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ أَوْثَٰنًا وَتَخْلُقُونَ إِفْكًا إِنَّ ٱلَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَمْلِكُونَ لَكُمْ رِزْقًا فَٱبْتَغُوا۟ عِندَ ٱللَّهِ ٱلرِّزْقَ وَٱعْبُدُوهُ وَٱشْكُرُوا۟ لَهُۥٓ إِلَيْهِ تُرْجَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் சிலைகளைத்தான். இன்னும் பொய்யை இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் எவர்களை வணங்குகின்றீர்களோ அவர்கள் உங்களுக்கு உணவளிக்க உரிமை பெறமாட்டார்கள். ஆகவே, அல்லாஹ்விடம் உணவைத் தேடுங்கள். அவனை வணங்குங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் சிலைகளைத்தான். இன்னும், (அந்த சிலைகள் பற்றி) பொய்(யான கதை)களை இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் எவர்களை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்கு சக்தி பெறமாட்டார்கள். ஆகவே, அல்லாஹ்விடம் வாழ்வாதாரத்தைத் தேடுங்கள். இன்னும், அவனை வணங்குங்கள்; இன்னும், அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. தவிர, அல்லாஹ்வை அன்றி சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். நீங்கள் பொய்யை கற்பனை செய்கிறீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்'' என்றும் கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70