caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:18

وَإِن تُكَذِّبُوا۟ فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் பொய்ப்பித்தால் உங்களுக்கு முன்னர் பல சமுதாயத்தினர் திட்டமாக பொய்ப்பித்துள்ளனர். தூதர்மீது தெளிவான எடுத்துரைத்தலே தவிர வேறில்லை.
Tamil Translation - Omar Sharif(மனிதர்களே!) நீங்கள் (இந்தத் தூதரை) பொய்ப்பித்தால் உங்களுக்கு முன்னர் பல சமுதாயத்தினர் (தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை) திட்டமாக பொய்ப்பித்துள்ளனர். தெளிவாக எடுத்துரைப்பதே தவிர (உங்களை நேர்வழியில் நிர்ப்பந்திப்பது) தூதர் மீது கடமை இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi18. (இப்றாஹீமே! மக்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘ நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். நம் தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது) அத்தூதர் மீது கடமையில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70