caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:16

وَإِبْرَٰهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் இப்ராஹீம் அவர் தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்: அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும் அவனை அஞ்சுங்கள். நீங்கள் அறிகின்றவர்களாக இருந்தால் இதுதான் உங்களுக்கு சிறந்ததாகும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இப்ராஹீம் அவர் தனது மக்களுக்கு (பின் வருமாறு உபதேசம்) கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! (அவர் கூறினார்:) அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், அவனை அஞ்சுங்கள். நீங்கள் (உண்மையை) அறிபவர்களாக இருந்தால் இதுதான் உங்களுக்கு சிறந்ததாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. இப்றாஹீமை (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பிவைத்த சமயத்தில்) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனையே நீங்கள் அஞ்சி நடங்கள். நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்'' (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70