وَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ كُلُّ شَىْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُۥ لَهُ ٱلْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைத்து விடாதீர்! (வணங்கி விடாதீர்!) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஒரு கடவுள் இல்லவே இல்லை. எல்லாப் பொருள்களும் அழியக்கூடியவையே அவனது முகத்தைத் தவிர (-அவனைத் தவிர). அதிகாரம் அவனுக்கே உரியது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைத்து விடாதீர்! (அவனையன்றி வேறு ஒன்றை வணங்கி விடாதீர்!) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஒரு இறைவன் இல்லவே இல்லை. எல்லாப் பொருள்களும் அழியக்கூடியவையே, அவனது முகத்தைத் தவிர. (முடிவான) தீர்ப்பு அவனுக்கே உரியது. இன்னும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi88. (நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுளை நீர் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு கடவுள் இல்லவே இல்லை. அவனது திருமுகத்தைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள்.