caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 87

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:87

وَلَا يَصُدُّنَّكَ عَنْ ءَايَٰتِ ٱللَّهِ بَعْدَ إِذْ أُنزِلَتْ إِلَيْكَ وَٱدْعُ إِلَىٰ رَبِّكَ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் வசனங்களை (பின்பற்றுவதையும் அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதையும்) விட்டு -அவை உமக்கு இறக்கப்பட்டதன் பின்னர் உம்மை அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள்) திருப்பி விடவேண்டாம். உமது இறைவன் பக்கம் (உலக மக்களை) அழைப்பீராக! இணைவைப்பவர்களில் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் வசனங்களை (பின்பற்றுவதையும் அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதையும்) விட்டு - அவை உமக்கு இறக்கப்பட்டதன் பின்னர் - அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள் உம்மை தடுத்து, கெட்ட பாதையின் பக்கம்) உம்மை திருப்பி விடவேண்டாம். உமது இறைவன் பக்கம் (உலக மக்களை எப்போதும்) அழைப்பீராக! இணைவைப்பவர்களில் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi87. இவ்வேதம் உமக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீர் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உம்மை தடுத்துவிட வேண்டாம். ஆகவே, உமது இறைவன் பக்கம் (நீர் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருப்பீராக. நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70