وَمَا كُنتَ تَرْجُوٓا۟ أَن يُلْقَىٰٓ إِلَيْكَ ٱلْكِتَٰبُ إِلَّا رَحْمَةً مِّن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ ظَهِيرًا لِّلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இந்த வேதம் உமக்கு இறக்கப்படுவதை நீர் எதிர்பார்த்திருக்கவில்லை, என்றாலும் உமது இறைவனின் கருணையினால் தான் (உமக்கு இது அருளப்பட்டது). ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு உதவியாளராக அறவே நீர் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இந்த வேதம் உமக்கு இறக்கப்படுவதை நீர் எதிர்பார்த்திருக்கவில்லை, என்றாலும் உமது இறைவனின் கருணையினால்தான் (உமக்கு இது இறக்கப்பட்டது). ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு உதவியாளராக அறவே நீர் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi86. (நபியே!) இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் உமது இறைவனின் அருளினால்தான் (இது உமக்கு கொடுக்கப்பட்டது). ஆகவே, நிச்சயமாக நீர் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டாம்.