caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 78

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:78

قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلْمٍ عِندِىٓ أَوَلَمْ يَعْلَمْ أَنَّ ٱللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِۦ مِنَ ٱلْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْـَٔلُ عَن ذُنُوبِهِمُ ٱلْمُجْرِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் கூறினான்: “இதை நான் வழங்கப்பட்டதெல்லாம் என்னிடம் உள்ள அறிவினால்தான்.” இவனுக்கு முன்னர் பல தலைமுறையினர்களில் இவனைவிட பலத்தால் மிகக் கடினமான, (செல்வங்களை) சேகரிப்பதில் மிக அதிகமானவர்களை நிச்சயமாக அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? (மறுமை நாளில்) குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்படமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவன் கூறினான்: “இதை நான் வழங்கப்பட்டதெல்லாம் என்னிடம் உள்ள அறிவினால்தான்.” இவனுக்கு முன்னர் பல தலைமுறையினர்களில் இவனைவிட எவர்கள் கடுமையான பலமுடையவர்களாகவும் (செல்வங்களை) மிக அதிகமாக சேகரித்தவர்களாகவும் இருந்தார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? இன்னும், (மறுமை நாளில் நிராகரிப்பாளர்களான) குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்படமாட்டார்கள். (அவர்கள் விசாரனையின்றி நரக நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi78. அதற்கவன் ‘‘ (என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)'' என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்களைப் பற்றி கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70