caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 50

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:50

فَإِن لَّمْ يَسْتَجِيبُوا۟ لَكَ فَٱعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَآءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَيْرِ هُدًى مِّنَ ٱللَّهِ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் உமக்கு பதிலளிக்கவில்லை என்றால் நீர் அறிவீராக! “நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் தங்கள் மன இச்சைகளைத்தான்.” அல்லாஹ்வின் நேர்வழி அன்றி தனது மன இச்சையை பின்பற்றியவனை விட பெரும் வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (நிராகரிப்பில் வரம்பு மீறுகின்ற) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் உமக்கு பதிலளிக்கவில்லை என்றால் (அவர்களைப் பற்றி) நீர் அறிவீராக! “நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் தங்கள் மன விருப்பங்களைத்தான்.” அல்லாஹ்வின் நேர்வழி இன்றி தனது மன விருப்பத்தை பின்பற்றியவனை விட பெரும் வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (அவனது கட்டளைகளை மீறுகின்ற) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi50. உமக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீர் அறிந்து கொள்வீராக. அல்லாஹ்வுடைய நேரான வழியை தவிர்த்து விட்டுத் தன் சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70