قُلْ فَأْتُوا۟ بِكِتَٰبٍ مِّنْ عِندِ ٱللَّهِ هُوَ أَهْدَىٰ مِنْهُمَآ أَتَّبِعْهُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: “அவ்விரண்டை விட (தவ்ராத், இன்ஜீலை விட) மிக்க நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள், (தவ்ராத்தும் இன்ஜீலும் சூனியம் என்று நீங்கள் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், நான் அதை பின்பற்றுகிறேன்.”
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “ஆக, (தவ்ராத்தும் இன்ஜீலும் சூனியம் என்று நீங்கள் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (தவ்ராத், இன்ஜீல் ஆகிய) இவ்விரண்டை விட மிக்க நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள். நான் அதை பின்பற்றுகிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi49. ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ்விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதம், இன்னும் திரு குர்ஆன் ஆகிய) இவ்விரண்டையும் விட நேரான வழியை அறிவிக்கக்கூடிய ஒரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக.