وَمَا كُنتَ بِجَانِبِ ٱلطُّورِ إِذْ نَادَيْنَا وَلَٰكِن رَّحْمَةً مِّن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٍ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்த) மலைக்கு அருகில் நாம் (மூஸாவை) அழைத்த போது நீர் (அங்கு) இருக்கவில்லை. எனினும், (முந்திய நபிமார்களின் வரலாறுகளை உமக்கு நாம் எடுத்துக்கூறியதும் உம்மை இவர்களுக்கு தூதராக அனுப்பியதும்) உமது இறைவனின் அருளினால் ஆகும். ஏனெனில், நீர் ஒரு மக்களை -அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக- எச்சரிக்க வேண்டும். உமக்கு முன்னர் அவர்களிடம் எச்சரிப்பாளர் எவரும் வரவில்லை.
Tamil Translation - Omar Sharif(அந்த) மலைக்கு அருகில் நாம் (மூஸாவை) அழைத்தபோது நீர் (அங்கு) இருக்கவில்லை. எனினும், (முந்திய நபிமார்களின் வரலாறுகளை உமக்கு நாம் எடுத்துக்கூறியதும் உம்மை இவர்களுக்கு தூதராக அனுப்பியதும்) உமது இறைவனின் அருளினால் ஆகும். ஏனெனில், ஒரு மக்களை - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக - நீர் எச்சரிக்க வேண்டும். உமக்கு முன்னர் அந்த மக்களுக்கு எச்சரிப்பாளர் எவரும் வரவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi46. மேலும், (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. எனினும், உமக்கு முன்னர் (நமது) தூதர் ஒருவருமே வராத (இந்த) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உமது இறைவனின் அருளால் (இவ்விஷயம் உமக்கு அறிவிக்கப்பட்டது). அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக!