caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 47

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:47

وَلَوْلَآ أَن تُصِيبَهُم مُّصِيبَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَيَقُولُوا۟ رَبَّنَا لَوْلَآ أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களின் கரங்கள் முற்படுத்தியதால் அவர்களுக்கு ஒரு சோதனை (தண்டனை ஒன்று) ஏற்பட்டு, (பிறகு) எங்கள் இறைவா! நீ எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே! நம்பிக்கையாளர்களில் நாங்கள் ஆகியிருப்போமே! என்று அவர்கள் கூறாதிருப்பதற்காக (உம்மை அவர்களுக்கு தூதராக அனுப்பினோம். இல்லை என்றால் உம்மை தூதராக அனுப்புவதற்கு முன்னரே நாம் அவர்களை தண்டித்திருப்போம்.)
Tamil Translation - Omar Sharifஅவர்களின் கரங்கள் முற்படுத்தியதால் அவர்களுக்கு ஒரு சோதனை (தண்டனை ஒன்று) ஏற்பட்டு, பிறகு, எங்கள் இறைவா! நீ எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி இருக்கக்கூடாதா? ஆக, நாங்கள் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே! இன்னும், நம்பிக்கையாளர்களில் நாங்கள் ஆகியிருப்போமே! என்று அவர்கள் கூறாதிருப்பதற்காக (உம்மை அவர்களுக்கு தூதராக அனுப்பினோம். இல்லை என்றால் உம்மை தூதராக அனுப்புவதற்கு முன்னரே நாம் அவர்களை தண்டித்திருப்போம்).
Tamil Translation - Abdulhamid Baqawi47. (நபியே! உமது மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை ஒரு வேதனை வந்தடையும் சமயத்தில் ‘‘ எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன் வசனங்களை நாங்கள் பின்பற்றி (உன்னை) நம்பிக்கை கொண்டிருப்போமே'' என்று கூறாதிருக்கும் பொருட்டே (உம்மை நம் தூதராக இவர்களிடம் அனுப்பிவைத்தோம்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70