وَلَٰكِنَّآ أَنشَأْنَا قُرُونًا فَتَطَاوَلَ عَلَيْهِمُ ٱلْعُمُرُ وَمَا كُنتَ ثَاوِيًا فِىٓ أَهْلِ مَدْيَنَ تَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِنَا وَلَٰكِنَّا كُنَّا مُرْسِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன்றாலும், பல தலைமுறையினரை (அவருக்குப் பின்) நாம் உருவாக்கினோம். அவர்களுக்கு காலம் நீண்டு சென்றது. (ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்கை மறந்தனர்.) இன்னும் (நபியே!) நீர் மத்யன் வாசிகளுடன் தங்கி(யவராகவும்) அவர்கள் மீது நமது வசனங்களை நீர் ஓதியவராக(வும்) இல்லை. (இவற்றில் எந்த ஒரு சம்பவத்திலும் நீர் உடன் இருக்கவில்லை.) என்றாலும் (நாம்தான் அவற்றை எல்லாம் செய்தோம். இன்னும்) தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக நாம்தான் இருந்தோம்.
Tamil Translation - Omar Sharifஎன்றாலும், நாம் பல தலைமுறையினரை (அவருக்குப் பின்) உருவாக்கினோம். ஆக, அவர்களுக்கு காலம் நீண்டு சென்றது. (சில காலம் கழிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்கை மறந்தனர்.) இன்னும் (நபியே!) நீர் மத்யன் நகரவாசிகளுடன் தங்கி(யவராகவும்) அவர்கள் மீது நமது வசனங்களை ஓதி காண்பிப்பவராக(வும்) நீர் இல்லை. (இவற்றில் எந்த ஒரு சம்பவத்திலும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.) என்றாலும், (நாம்தான் அவற்றை எல்லாம் செய்தோம். இன்னும், இறுதி நபி வரை தொடர்ந்து) தூதர்களை நாம் அனுப்பக்கூடியவர்களாக இருந்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi45. எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீர் கூறுவதெல்லாம் இறைவனால் உமக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?) மேலும், (நபியே!) மத்யன் வாசிகளிடமும் நீர் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம் வசனங்களை நீர் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறீர். ஆகவே, நிச்சயமாக நாம் உம்மை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பிவைத்திருக்கிறோம். (நம் வஹ்யி மூலம் கிடைத்த விஷயங்களையே நீர் அவர்களுக்கு அறிவிக்கிறீர்.)