caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:44

وَمَا كُنتَ بِجَانِبِ ٱلْغَرْبِىِّ إِذْ قَضَيْنَآ إِلَىٰ مُوسَى ٱلْأَمْرَ وَمَا كُنتَ مِنَ ٱلشَّٰهِدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவிடம் நாம் (தூதுத்துவத்தையும் பல) சட்டங்களை(யும்) ஒப்படைத்த போது (மலையின்) மேற்கு பக்கத்தில் (நபியே!) நீர் இருக்கவில்லை. (இன்னும் அவருடன்) இருந்தவர்களில் நீர் இருக்கவில்லை. (அப்படி இருந்தும் மூஸாவைப் பற்றிய வரலாற்றை நீங்கள் உண்மையாகக் கூறுகிறீர்கள். ஆகவே, உமது தூதுத்துவத்தை இந்த மக்கள் எப்படி மறுக்கமுடியும்?)
Tamil Translation - Omar Sharifமூஸாவிடம் நாம் (தூதுத்துவத்தையும் பல) சட்டங்களை(யும்) ஒப்படைத்தபோது (மலையின்) மேற்கு பக்கத்தில் (நபியே!) நீர் இருக்கவில்லை. இன்னும், (அந்த இடத்தில் அவருடன்) இருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை. (அப்படி இருந்தும் மூஸாவைப் பற்றிய வரலாற்றை நீங்கள் சரியாகக் கூறுகிறீர்கள். ஆகவே, உமது தூதுத்துவத்தை வேதக்காரர்கள் எப்படி மறுக்கிறார்கள்?)
Tamil Translation - Abdulhamid Baqawi44. (நபியே! தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீர் அதன் மேற்குத் திசையிலும் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70