وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ مِنۢ بَعْدِ مَآ أَهْلَكْنَا ٱلْقُرُونَ ٱلْأُولَىٰ بَصَآئِرَ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةً لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுந்திய தலைமுறையினர்களை நாம் அழித்த பின்னர் மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் கருணையாகவும் மூஸாவிற்கு நாம் திட்ட வட்டமாக வேதத்தை தந்தோம். அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்.
Tamil Translation - Omar Sharifமுந்திய தலைமுறையினர்களை நாம் அழித்த பின்னர் மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் கருணையாகவும் மூஸாவிற்கு நாம் திட்ட வட்டமாக வேதத்தைக் கொடுத்தோம், அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும் என்பதற்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi43. (அவர்களுக்கு) முன்னிருந்த வகுப்பார்களையும் நாம் அழித்துவிட்ட பின்னர் (அவர்களுடைய வேதங்களும் அழிந்து விட்டதனால்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்கு நல்ல படிப்பினை தரக்கூடியதாகவும், நேரான வழியாகவும், அருளாகவும் இருந்தது. அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக!