قَالَ إِنِّىٓ أُرِيدُ أَنْ أُنكِحَكَ إِحْدَى ٱبْنَتَىَّ هَٰتَيْنِ عَلَىٰٓ أَن تَأْجُرَنِى ثَمَٰنِىَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِندِكَ وَمَآ أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰلِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: நான் எனது இந்த இரண்டு பெண்பிள்ளைகளில் ஒருத்தியை உனக்கு மணமுடித்துத்தர விரும்புகிறேன். நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் (என் கால்நடைகளை மேய்ப்பதை) எனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும் என்ற நிபந்தனையின் மீது. நீ (எட்டுக்குப் பதிலாக) பத்து ஆண்டுகளை பூர்த்திசெய்தால் அது உன் புறத்திலிருந்து (நீ செய்யும் உதவியாகும்). நான் உன்மீது சிரமம் ஏற்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் நீ காண்பாய்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் (என் கால்நடைகளை மேய்ப்பதை) எனக்குக் கூலியாக (-மஹ்ராக) தரவேண்டும் என்ற நிபந்தனையின்படி நான் எனது இந்த இரண்டு பெண்பிள்ளைகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத்தர விரும்புகிறேன். ஆக, நீர் பத்து ஆண்டுகளாக பூர்த்திசெய்தால் அது உன் புறத்திலிருந்து நீர் செய்யும் உதவியாகும். நான் உன்மீது சிரமம் ஏற்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் நீ காண்பாய்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. அதற்கு அவர் (மூஸாவிடம்) கூறினார்: ‘‘ நீர் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உமக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீர் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அது நீர் எனக்கு செய்யும் நன்றிதான். நான் உமக்கு (அதிகமான) சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீர் என்னை உமக்கு உபகாரியாகவே காண்பீர்'' (என்றார்).