قَالَتْ إِحْدَىٰهُمَا يَٰٓأَبَتِ ٱسْتَـْٔجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ ٱسْتَـْٔجَرْتَ ٱلْقَوِىُّ ٱلْأَمِينُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்விருவரில் ஒருத்தி கூறினாள்: என் தந்தையே! அவரை பணியில் அமர்த்துவீராக! நீர் பணியில் அமர்த்தியவர்களில் சிறந்தவர் (இந்த) நம்பிக்கையாளரான பலசாலி ஆவார்.
Tamil Translation - Omar Sharifஅவ்விருவரில் ஒருத்தி கூறினாள்: என் தந்தையே! (நம்மிடம் வேலை செய்ய) அவரை கூலிக்கு அமர்த்துவீராக! நீர் கூலிக்கு அமர்த்துபவர்களில் சிறந்தவர் (யாரென்றால்), பலசாலி, நம்பிக்கையாளர் ஆவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. (அத்தருணத்தில், அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) ‘‘ என் தந்தையே! நீர் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வீராக. நீர் கூலிக்கு அமர்த்தியவர்களிலேயே மிகச் சிறந்தவர் (இந்த) நம்பிக்கைக்குரிய பலசாலியே ஆவார்'' என்று கூறினாள்.