قَالَ ذَٰلِكَ بَيْنِى وَبَيْنَكَ أَيَّمَا ٱلْأَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَٰنَ عَلَىَّ وَٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் (-மூஸா) கூறினார்: இது (நாம் செய்த இந்த ஒப்பந்தம்) எனக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் உள்ளதாகும். (இருவரும் அதை சரியாக நிறைவேற்றுவது கடமையாகும்.) இரண்டு தவணையில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது வரம்பு மீறுதல் கூடாது. (அதைவிட அதிகம் என்னிடம் கேட்கக்கூடாது.) நாம் கூறுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளன் (சாட்சியாளன்) ஆவான்.
Tamil Translation - Omar Sharif(மூஸா) கூறினார்: “எனக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் நாம் செய்த ஒப்பந்தமாகும் இது. இரண்டு தவணையில் எதை நான் நிறைவேற்றினாலும் (அதைவிட அதிகம் என்னிடம் கேட்டு) என் மீது வரம்பு மீறுதல் கூடாது. இன்னும், நாம் கூறுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளன் (சாட்சியாளன்) ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi28. அதற்கு மூஸா ‘‘ உமக்கும் நமக்குமிடையே இதுவே (உடன்படிக்கையாகும்). இவ்விரு நிபந்தனைகளில் எதையும் நான் நிறைவேற்றலாம். (இன்னதைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று) என்மீது கட்டாயமில்லை. நாம் பேசிக்கொண்ட இவ்வுடன்படிக்கைக்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று கூறினார்.