caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 25

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:25

فَجَآءَتْهُ إِحْدَىٰهُمَا تَمْشِى عَلَى ٱسْتِحْيَآءٍ قَالَتْ إِنَّ أَبِى يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا فَلَمَّا جَآءَهُۥ وَقَصَّ عَلَيْهِ ٱلْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்விருவரில் ஒருத்தி (தன் முகத்தை மறைத்தவளாக) வெட்கத்துடன் நடந்தவளாக வந்து கூறினாள்: நிச்சயமாக என் தந்தை உம்மை அழைக்கிறார் நீ எங்களுக்காக நீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு தருவதற்காக. அவர் அவரிடம் வந்து, (தனது) வரலாற்றை விவரித்த போது அவர் (-அப்பெண்ணின் தந்தை) கூறினார்: பயப்படாதே! அநியாயக்கார மக்களிடமிருந்து நீ தப்பித்து விட்டாய்.
Tamil Translation - Omar Sharifஆக, அவ்விருவரில் ஒருத்தி (தன் முகத்தை மறைத்துக் கொண்டு) வெட்கத்துடன் நடந்து வந்து கூறினாள்: “நீ எங்களுக்காக (எங்கள் கால் நடைகளுக்கு) நீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு தருவதற்காக நிச்சயமாக என் தந்தை உம்மை அழைக்கிறார்.” ஆக, அவர் அவ(ளின் தந்தையா)ரிடம் வந்து, (தனது) சரித்திரத்தை அவருக்கு விவரித்தபோது, (அப்பெண்ணின் தந்தையாகிய) அவர் கூறினார்: “பயப்படாதே! அநியாயக்கார மக்களிடமிருந்து நீ தப்பித்து விட்டாய்.”
Tamil Translation - Abdulhamid Baqawi25. அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து ‘‘நீர் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்குக் கொடுக்கும் பொருட்டு மெய்யாகவே என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்று கூறி அழைத்துச் சென்றாள். மூஸா அவரிடம் சென்று தன் சரித்திரத்தைக் கூறவே அவர் (இனி) ‘‘ நீர் பயப்பட வேண்டாம். அநியாயக்கார மக்களைவிட்டு நீர் தப்பித்துக் கொண்டீர்'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70