caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 60

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:60

أَمَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَنۢبَتْنَا بِهِۦ حَدَآئِقَ ذَاتَ بَهْجَةٍ مَّا كَانَ لَكُمْ أَن تُنۢبِتُوا۟ شَجَرَهَآ أَءِلَٰهٌ مَّعَ ٱللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களையும் பூமியையும் படைத்தவன் (நாம் வணங்குவதற்கு அவன்) சிறந்தவனா? (அல்லது எதற்கும் ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா?). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்கள் இணைவைக்கின்ற மக்கள் ஆவர்.
Tamil Translation - Omar Sharifவானங்களையும் பூமியையும் படைத்தவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது எதையும் படைக்க ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா?). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. (இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்கள் (அல்லாஹ்வுடன் படைப்புகளை) இணைவைக்கின்ற மக்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. வானங்களையும் பூமியையும் படைத்து, மேகத்தில் இருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்? நாமே அதைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகான தோட்டங்களையும் உற்பத்தி செய்கிறோம். (நம் உதவியின்றி) அதன் மரங்களை முளைக்கவைக்க உங்களால் முடியாது. ஆகவே, அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இவ்வாறிருந்தும்) இவர்கள் (தங்கள் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்குச்) சமமாக்குகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70