أَمَّن جَعَلَ ٱلْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَٰلَهَآ أَنْهَٰرًا وَجَعَلَ لَهَا رَوَٰسِىَ وَجَعَلَ بَيْنَ ٱلْبَحْرَيْنِ حَاجِزًا أَءِلَٰهٌ مَّعَ ٱللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவன் பூமியை நிலையானதாக ஆக்கி, அதற்கிடையில் ஆறுகளை ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் இருப்பதற்காக) பெரும் மலைகளைப் படைத்து, இரு கடல்களுக்கு இடையில் தடுப்பை அமைத்தானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் மகத்துவத்தை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லது, எவன் பூமியை நிலையானதாக ஆக்கி, அதற்கிடையில் ஆறுகளை ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் இருப்பதற்காக) பெரும் மலைகளைப் படைத்து, இரு கடல்களுக்கு இடையில் தடுப்பை அமைத்தானோ அவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவர்கள் வணங்குவதற்கு சிறந்தவர்களா?) (இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கண்ணியத்தையும் தாங்கள் வணங்கும் பொய்யான தெய்வங்களின் பலவீனத்தையும்) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi61. பூமியை ஓர் உறுதியான தங்குமிடமாக அமைத்து, அதன் மத்தியில் ஆறுகளையும் அ(தை உறுதிப்படுத்துவ)தற்கு மலைகளையும் அமைத்தவன் யார்? இரு கடல்களுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவன் யார்? (இவற்றைச் செய்த) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.