وَإِنِّى مُرْسِلَةٌ إِلَيْهِم بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌۢ بِمَ يَرْجِعُ ٱلْمُرْسَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக நான் அவர்களிடம் (என் அரசவை தூதர்களுடன்) ஓர் அன்பளிப்பை அனுப்புகிறேன். (நான் அனுப்பிய அந்த) தூதர்கள் என்ன பதில் திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கிறேன்.” (அதன் பின்னர் முடிவு செய்கிறேன்.)
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக நான் அவர்களிடம் (என் அரசவை தூதர்களுடன்) ஓர் அன்பளிப்பை அனுப்புகிறேன். (நான் அனுப்பிய அந்த) தூதர்கள் என்ன பதிலை திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கிறேன். (அதன் பின்னர் முடிவு செய்கிறேன்.)”
Tamil Translation - Abdulhamid Baqawi35. ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி, (அதை எடுத்துச் செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை எதிர்பார்ப்பேன்'' என்று கூறினாள். (அவ்வாறே அனுப்பியும் வைத்தாள்.)