caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:36

فَلَمَّا جَآءَ سُلَيْمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيْرٌ مِّمَّآ ءَاتَىٰكُم بَلْ أَنتُم بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் (-அவளின் தூதர்) ஸுலைமானிடம் வந்தபோது, அவர் (ஸுலைமான்) கூறினார்: செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்தது. மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு பெருமிதம் அடைவீர்கள். (நான் அடைய மாட்டேன்.)
Tamil Translation - Omar Sharifஆக, (அவளின் தூதர்) சுலைமானிடம் வந்தபோது, (சுலைமான்) கூறினார்: “செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்ததாகும். மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்பினால் பெருமிதம் அடைவீர்கள். (நான் அதை ஏற்க மாட்டேன்.)”
Tamil Translation - Abdulhamid Baqawi36. அந்தத் தூதர் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவரை நோக்கி) ‘‘ நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவை உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. மாறாக, உங்கள் இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70