وَوَرِثَ سُلَيْمَٰنُ دَاوُۥدَ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمْنَا مَنطِقَ ٱلطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَىْءٍ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَضْلُ ٱلْمُبِينُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாவூதுக்கு (அவரின் கல்விக்கும் ஆட்சிக்கும் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும்) ஸுலைமான் வாரிசாக ஆனார். இன்னும், அவர் கூறினார்: மக்களே! நாங்கள் பறவைகளின் பேச்சை (-மொழிகளை புரியும் கல்வியை) கற்பிக்கப்பட்டோம். (பல செல்வங்களிலிருந்து எங்களுக்கு தேவையான) எல்லாம் வழங்கப்பட்டோம். நிச்சயமாக இதுதான் தெளிவான மேன்மையாகும்.
Tamil Translation - Omar Sharifதாவூதுக்கு (அவரின் கல்விக்கும் ஆட்சிக்கும் அவரின் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும்) ஸுலைமான் வாரிசாக ஆனார். இன்னும், அவர் கூறினார்: “மக்களே! நாங்கள் பறவைகளின் பேச்சை (-மொழிகளை புரியும் கல்வியை) கற்பிக்கப்பட்டோம். இன்னும், (பல செல்வங்களிலிருந்து எங்களுக்கு தேவையான) எல்லா பொருள்களையும் நாங்கள் வழங்கப்பட்டோம். நிச்சயமாக இதுதான் தெளிவான மேன்மையாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. பின்னர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். (ஸுலைமான் மனிதர்களை நோக்கி) ‘‘ மனிதர்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) எல்லாப் பொருள்களும் (ஏராளமாகவே) கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்) மிக்க தெளிவானதொரு அருளாகும்'' என்று கூறி(யும் நன்றி செலுத்தி)னார்.