وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ وَسُلَيْمَٰنَ عِلْمًا وَقَالَا ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٍ مِّنْ عِبَادِهِ ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் (பறவைகளின் மொழி அறிவு மற்றும் பல துறைகளின் சிறப்பான) அறிவை நாம் தந்தோம். அவ்விருவரும் கூறினர்: “தனது நம்பிக்கையாளர்களான அடியார்களில் பலரைப் பார்க்கிலும் எங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.”
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் (பறவைகளின் மொழி அறிவு மற்றும் பல துறைகளின் சிறப்பான) கல்வி அறிவை நாம் தந்தோம். அவ்விருவரும் கூறினார்கள்: “தனது நம்பிக்கையாளர்களான அடியார்களில் பலரைப் பார்க்கிலும் எங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் (இம்மை மறுமையில் பயனளிக்கக்கூடிய) கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும், ‘‘ புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அவன்தான் நம்பிக்கை கொண்ட தன் நல்லடியார்களில் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான்'' என்று கூறி (நன்றி செலுத்தி)னார்கள்.