وَجَحَدُوا۟ بِهَا وَٱسْتَيْقَنَتْهَآ أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அவற்றை (-ஒன்பது அத்தாட்சிகளை) மறுத்தனர், அநியாயமாக பெருமையாக. அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதியாக நம்பின. ஆகவே, (இந்த) விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
Tamil Translation - Omar Sharif(அவர்களுக்கு அல்லாஹ் ஒன்பது அத்தாட்சிகளை காண்பித்தான்.) அவர்கள் அவற்றை அநியாயமாகவும் பெருமையாகவும் மறுத்தனர். அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதிகொண்டிருந்தன. ஆக, (இந்த) விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi14. (அத்தாட்சிகளைக் கண்ட) அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதிகொண்ட போதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவற்றை அவர்கள் மறுத்தார்கள். ஆகவே, இந்த விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.