أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ قَدْ يَعْلَمُ مَآ أَنتُمْ عَلَيْهِ وَيَوْمَ يُرْجَعُونَ إِلَيْهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوا۟ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்விற்கே சொந்தமானவை வானங்களிலும் பூமியிலும் உள்ளவை. திட்டமாக நீங்கள் இருக்கும் நிலையை அவன் நன்கறிந்தவன். (நபியின் கட்டளைக்கு மாறுசெய்பவர்கள்) அந்நாளில் அவனிடம் (அல்லாஹ்விடம்) அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்போது அவர்கள் செய்ததை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்விற்கே சொந்தமானவையாகும். திட்டமாக நீங்கள் இருக்கும் நிலையை அவன் நன்கறிவான். இன்னும், (நபியின் கட்டளைக்கு மாறுசெய்த) அவர்கள் அந்நாளில் அவனிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்போது, ஆக, அவர்கள் செய்ததை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi64. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (இன்றைய தினம்) இருக்கும் நிலைமையையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அவனிடம் கொண்டு போகப்படும் நாளில் (இருக்கும் நிலைமையையும் அவன் நன்கறிவான். ஆகவே,) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அந்த நாளில்) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.