لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًا قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு மத்தியில் தூதரின் சாபத்தை உங்களில் சிலர் சிலரை சபிப்பது போன்று ஆக்கிவிடாதீர்கள். (அவருடைய சாபம் கண்டிப்பாக பலித்துவிடும்) உங்களில் மறைவாக நழுவிச் செல்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் (-உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்) குழப்பம் தங்களை அடைவதை அல்லது வலிதரும் (கடுமையான) தண்டனை தங்களை அடைவதைப் பற்றி உஷாராக (பயந்தவர்களாக) இருக்கட்டும்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு மத்தியில் தூதர் (உங்களுக்கு எதிராக) பிரார்த்திப்பதை உங்களில் சிலர் சிலருக்கு (எதிராக) பிரார்த்திப்பது போன்று ஆக்கிவிடாதீர்கள். (அவருடைய பிரார்த்தனை கண்டிப்பாக நிகழ்ந்துவிடும்.) உங்களில் மறைவாக நழுவிச் செல்பவர்களை திட்டமாக அல்லாஹ் நன்கறிவான். ஆக, அவருடைய கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் (-உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்) குழப்பம் தங்களை அடைந்துவிடுவதை; அல்லது, வலி தரும் (கடுமையான) தண்டனை தங்களை அடைந்துவிடுவதைப் பற்றி உஷாராக (பயந்தவர்களாக) இருக்கட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi63. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருத வேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) உங்களில் எவர்கள் (நம் தூதர் கூட்டிய சபையிலிருந்து) மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறுசெய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஒரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும்.