caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 22

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:22

وَلَا يَأْتَلِ أُو۟لُوا۟ ٱلْفَضْلِ مِنكُمْ وَٱلسَّعَةِ أَن يُؤْتُوٓا۟ أُو۟لِى ٱلْقُرْبَىٰ وَٱلْمَسَٰكِينَ وَٱلْمُهَٰجِرِينَ فِى سَبِيلِ ٱللَّهِ وَلْيَعْفُوا۟ وَلْيَصْفَحُوٓا۟ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ ٱللَّهُ لَكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் செல்வமும் வசதியும் உடையவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா சென்றவர்களுக்கும் தர்மம் கொடுக்க மாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டாம். அவர்கள் மன்னிக்கட்டும், பெருந்தன்மையுடன் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையுடையவன்.
Tamil Translation - Omar Sharifஉங்களில் செல்வமும் வசதியும் உடையவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் சென்றவர்களுக்கும் தர்மம் கொடுக்க மாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டாம். (செல்வந்தர்களான) அவர்கள் மன்னிக்கட்டும், பெருந்தன்மையுடன் விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (தர்மம்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், கருணையுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70