إِنَّ ٱلَّذِينَ يَرْمُونَ ٱلْمُحْصَنَٰتِ ٱلْغَٰفِلَٰتِ ٱلْمُؤْمِنَٰتِ لُعِنُوا۟ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக (அசிங்கமான செயலை) அறியாதவர்களான நம்பிக்கை கொண்ட பத்தினி பெண்கள் மீது யார் குற்றம் சுமத்துகிறார்களோ அவர்கள் உலகத்திலும் மறுமையிலும் சபிக்கப்பட்டார்கள். இன்னும் அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக (அசிங்கமான செயலை) அறியாதவர்களான நம்பிக்கை கொண்டவர்களான பத்தினியான பெண்கள் மீது யார் (அவர்கள் செய்யாததை) குற்றம் சுமத்துகிறார்களோ அவர்கள் உலகத்திலும் மறுமையிலும் சபிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு,
Tamil Translation - Abdulhamid Baqawi23. எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் (இறைவனுடைய) சாபத்திற்குள்ளாவார்கள். இன்னும், அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.