يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ وَمَن يَتَّبِعْ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ فَإِنَّهُۥ يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّى مَن يَشَآءُ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறானோ நிச்சயமாக அவன் (-அந்த ஷைத்தான்) அசிங்கத்தையும் கெட்டதையும் (அவருக்கு) ஏவுகிறான். அல்லாஹ்வுடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவரும் ஒரு போதும் தூய்மை அடைந்திருக்கமாட்டார் (-நேர்வழி பெற்றிருக்க மாட்டார்). எனினும், அல்லாஹ் தான் நாடியவரை பரிசுத்தப்படுத்துகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றுவாரோ நிச்சயமாக அ(ந்த ஷைத்தானான)வன் அசிங்கமான செயல்களையும் கெட்டதையும் (தன்னை பின்பற்றுவோருக்கு) ஏவுகிறான். அல்லாஹ்வுடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவரும் ஒரு போதும் தூய்மை அடைந்திருக்க மாட்டார் (-நேர்வழி பெற்றிருக்க மாட்டார்). எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தப்படுத்துகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கருணையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக ஆகி இருக்க முடியாது. எனினும், அல்லாஹ், தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிபவன் ஆவான்.