وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ رَءُوفٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் உடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக்க இரக்கமுள்ளவனாகவும் மகா கருணையுள்ளவனாகவும் இல்லாதிருந்தால் (நீங்கள் அழிந்து போயிருப்பீர்கள்.)
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மிக இரக்கமுள்ளவனாகவும் மகா கருணையுள்ளவனாகவும் இல்லாதிருந்தால் (அல்லாஹ்வின் தண்டனையால் நீங்கள் அழிந்து போயிருப்பீர்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi20. அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் மிக்க இரக்கமுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இல்லையெனில் (அவனுடைய வேதனை இதுவரை உங்களைப் பிடித்தே இருக்கும்).