caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 67

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:67

مُسْتَكْبِرِينَ بِهِۦ سَٰمِرًا تَهْجُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதைக் கொண்டு பெருமை அடித்தவர்களாக (உம்மை விட்டு திரும்பிச் செல்கின்றனர்). இரவில் (நிம்மதியாக இதைப்) பேசியவர்களாக (குர்ஆன் விஷயத்தில்) வீணானதைக் கூறுகின்றனர்.
Tamil Translation - Omar Sharif(அவர்கள் செய்கின்ற) அ(ந்)த (தீய, பாவ செயல்களி)னால் பெருமை அடித்தவர்களாக (உம்மை விட்டு திரும்பிச் செல்கிறார்கள்). இரவில் இதைப் (பற்றி கேலியாக) பேசியவர்களாக (குர்ஆன் விஷயத்தில் மக்களிடம்) வீணான (தவறான கருத்)தைக் கூறுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi67. நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று கூறப்படும்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70