caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 52

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:52

وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ وَلَا نَبِىٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلْقَى ٱلشَّيْطَٰنُ فِىٓ أُمْنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلْقِى ٱلشَّيْطَٰنُ ثُمَّ يُحْكِمُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமக்கு முன்னர் எந்த ஒரு ரசூலையும் நபியையும் நாம் அனுப்பவில்லை, அவர் ஓதும்போது ஷைத்தான் அவர் ஓதுவதில் (தனது கூற்றை) கூறியே தவிர. பின்னர், ஷைத்தான் கூறுவதை அல்லாஹ் போக்கி விடுவான். பிறகு அல்லாஹ் தனது வசனங்களை உறுதிப்படுத்துவான். (வேதத்திலிருந்து ஷைத்தான் கூறியதை நீக்கி வேதத்தை சுத்தப்படுத்தி விடுவான்.) அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharifஉமக்கு முன்னர் எந்த ஒரு ரஸூலையும் நபியையும் நாம் அனுப்பினால், அவர் ஓதும்போது ஷைத்தான் அவர் ஓதுவதில் (தனது கூற்றை நுழைத்துக்) கூறாமல் இருந்ததில்லை. பின்னர், ஷைத்தான் (நபியின் ஓதுதலுக்கு இடையில் நுழைத்துக்) கூறியதை அல்லாஹ் போக்கி விடுவான். பிறகு, அல்லாஹ் தனது வசனங்களை உறுதிப்படுத்துவான். (நபியின் ஓதுதலில் ஷைத்தான் நுழைத்ததை அல்லாஹ் நீக்கி வேதத்தை சுத்தப்படுத்தி விடுவான்.) அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், ரசூலும் (வேதத்தை) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டுபண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர் தன் வசனங்களை உறுதிப்படுத்திவிடுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70